Categories
மாநில செய்திகள்

பொதுத் தேர்விற்கான கட்டணம்… தமிழக அரசு வெளியீடு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் கடந்த ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் பொது தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டணம் குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதில் தமிழ் வழியில் பல்வேறு உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த காணொளி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் payment options,பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு கட்டணம் 100 ரூபாய். மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் 10 ரூபாய். சேவை கட்டணம் ரூ.5, மொத்தமாக ஒரு மாணவர் 115 ரூபாய் செலுத்த வேண்டும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டண விலக்கு பெற தகுதி உடையவர்கள் அல்லர்.

இதனையடுத்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் செய்முறை கொண்ட பாடங்கள் அடங்கிய பாடத் தொகுப்பில் பயில்வோர் ரூ.200, மதிப்பெண் சான்றிதழ் ரூ.20, சேவை கட்டணம் ரூ.5 என ஒரு மாணவர் மொத்தம் ரூ.225 செலுத்த வேண்டும். செய்முறை அல்லாத பாடல்கள் அடங்கிய பாட தொகுப்பில் பயில்வோர் ரூ.150, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.20, சேவை கட்டணம் ரூ.5, மொத்தம் ஒரு மாணவருக்கு ரூ.175 ரூபாய் செலுத்த வேண்டும்.

Categories

Tech |