துர்க்மெனிஸ்தான் நாட்டில் அலாபை இன நாயை போற்றும் வகையில் தேசிய விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்பு என்பது பொதுவானது. தாய் தனது பிள்ளைகள் மீது அன்பு செலுத்து போல குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அன்பு கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி மனிதர்கள் செல்லப் பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்துவது பொதுவானது. அதிலும் குறிப்பாக பூனை மற்றும் நாய்கள் மீது அன்பு அதிகமாகவே இருக்கும். செல்லப் பிராணியான நாயை கவுரவிக்க அரசு செய்த செயலை நீங்களே பாருங்கள்.
துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமான அலாபை இன நாயை போற்றும் வகையில் ஏப்ரல் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அண்ணா நாளை தேசிய விடுமுறையாக அறிவித்த அந்நாட்டு அதிபர் குர்பாங்குலி அறிவித்துள்ளார். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அலாபை இன நாய்க்கு 19 அடி உயரத்தில் அந்நாட்டு அரசு சிலை வைத்தது குறிப்பிடத்தக்கது.