போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்க இதுவே சரியான தருணம் என்று பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திரன் என்பவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்ய வழக்கு தடையாக இருப்பதாக கூறி தாயும், மைனர் பெண்ணும் தொடர்ந்த வழக்கில்,”காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இதுவே சரியான தருணம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.