Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வறட்சி “ரூ.1000 கோடி நிதி” ஒதுக்க வேண்டும் – துணை முதல்வர் ஓ.பி.எஸ்…!!

நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.  

பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார்.

Related image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின்  கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம்  இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்தார்.

Image result for மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்

அப்போது தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த  வரும் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக  நிதி ஒதுக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

Categories

Tech |