Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது…” பிரபல நடிகை மகளின் நிச்சயதார்த்தம்”…..!!

பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு  அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை போன்று இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவரும். சரண்யா மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தேசிய திரைப்பட விருதை பெற்றார். இயக்குனரும் நடிகருமான ராஜசேகரை மணந்துகொண்டார் .மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் பொன்வண்ணன் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு  தற்போது சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளை பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

Categories

Tech |