Categories
மாநில செய்திகள்

போக்சோவில் குற்றவாளி கைது…! பாதிக்கப்பட்ட பெண் தாய் போட்ட மனு… வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் …!!

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு தடையாக இருப்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் இந்திரன் என்பவர் சிறுவயதுப் பெண்களை கடத்தி அவர்களை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு திருமணம் செய்யவேண்டும் என்பதால் அதற்கு இந்த வழக்கு தடையாக இருக்கிறது. எனவே இந்த வழக்கை ரத்து செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அப்பெண்ணின் தாயாரை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்துள்ளார்.

அப்போது அப்பெண் தன் மகளுக்கு திருமணம் செய்ய தடையாக இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரினார். இது குறித்து நீதிபதி கூறியதாவது, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் வாக்குமூலத்தில் தான் கட்டாயப்படுத்தியதால் தான் இந்திரன் தன்னை அழைத்துச் சென்றதாக கூறியதை குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பது பாதிக்கப்பட்ட பெண் அவரது தாய் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் போன்றவர்களுக்கு தான் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ஆனால் இதனால் பயன் ஏதுமில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார். இதுபோன்ற வழக்குகளில் சிறு வயதுடைய இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. ஆனால் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் இதுவல்ல என்றார். மேலும் போக்சோ சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை  கொண்டு வர இதுவே தக்க சமயம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |