மல்லி லேகியம் செய்ய தேவையானப் பொருட்கள்:
மல்லிப் பொடி – 4 தேக்கரண்டி
கருப்பட்டிபொடி – 8 தேக்கரண்டி
தேன் – ருசிக்கேற்ப
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, அதில் மல்லி பொடி,கருப்பட்டிபொடி இரண்டையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பின்பு கொதிக்கின்ற கலவையானது, நன்கு கொதித்து வற்றி சுண்டி, முக்கால் பதம் வந்ததும், அதில் ருசிக்கேற்ப தேன் கலந்து கரண்டியால் நன்கு கலந்து, களியை போல் கெட்டியானதும், கிளறி விட்டு இறக்கி பரிமாறினால் ருசியான மல்லி லேகியம் ரெடி.