பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.