வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான்சன் பேட்டை பகுதியில் வசித்து வரும் மணிகண்டன், மனோகரன் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை இரும்பு கம்பிகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.