கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணுவை சோதனை செய்ததில், விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றம் அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. விந்து அணுக்களில் உள்ள விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் விந்து உயிரணுவின் வளர்ச்சியை குறைக்கும். இனப்பெருக்கம் ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.