தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால் போட்டுக் கொள்ளாமல் இருந்து கொள்ளலாம்” என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும் மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.