Categories
மாநில செய்திகள்

ரெடியா?…9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்திலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறப்புக்கு காத்திருக்கின்றனர்.

Categories

Tech |