Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களின் பிரச்னைகளை நிரந்தரமாக போக்க”… இந்த காயை சாப்பிடுங்கள்…!!

கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம்.

தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது.

அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, மாதவிடாய் கோளாறுகள், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளும் பெண்களுக்கு ஏற்படுகின்றது.

இதற்கு சாதரணமாக நாம் மருத்துவமனைகளில் சென்றால் பல மாதங்கள் சிகிச்சை பெறவேண்டும். சிலருக்கு குணமாக வருடங்கள் கூட ஆகின்றது. ஆனால், கழற்சிக்காய் பயன்படுத்துவது மூலம் எளிதில் இந்த நோயைக் குணப்படுத்திவிடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த கழற்சிக்காய் சூரணத்தை சுமார் 5 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை மற்றும் மாலை என்று இரு வேளைகளிலும் அருந்தவேண்டும்.

இப்படித் தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்துவர நல்ல பலன் கிடைக்கும். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து சினைப்பையில் தோன்றியிருந்த நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.

இந்த கழற்சிக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |