Categories
லைப் ஸ்டைல்

உங்க குழந்தைக்கு நெஞ்சுச்சளி இருக்கா…? அருமையான சில மருத்துவ குறிப்புகள் இதோ…!!

குழந்தைகளின் நெஞ்சுசளியை போக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சாதாரண இருமலோடு, சளி வந்தால் அது சீக்கிரத்தில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி வந்தால் அதற்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான தொடர் இருமல், நெஞ்சு சளி இருப்பது தெரியவரும். நெஞ்சு சளி வந்தால் உடனே இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து வந்துவிடும். இதைப் போக்க சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத வீட்டு இயற்கை மருத்துவ குறிப்புகள் பார்க்கலாம். இருப்பினும் சளி, இருமல், காய்ச்சல் அதிகமாகி குழந்தைகள் மூச்சுவிட சிரமப்பட்டு தும்மல் போட்டுக் கொண்டே இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இயற்கை மருத்துவக்குறிப்பு:

ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடியை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளி இருப்பதைப் பொறுத்து மூன்று வேளையும் கொடுத்துவர ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் வரும் சளியை கூட சரி செய்து விடும்.

நெஞ்சு சளி கரைய ஆடாதொடை இலையுடன் தேன் கலந்து கொடுக்கலாம்.

ஆடாதோடை இலைகளை எடுத்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகிவர நெஞ்சு சளி குறையும்.

கற்பூரவல்லியை சாறெடுத்து தேன் சேர்த்தது கொடுக்கலாம்.

கற்பூரவள்ளியை நீரில் கொதிக்க வைத்து ஆறிய நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மூக்கடைப்பு தீரும்.

எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சம அளவில் எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால் சளி குறையும்.

நல்ல சூடான பாலில் பனங்கற்கண்டு சேர்த்து இரவு உறங்கும் முன் குடிக்க கொடுக்கலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு சிறிது மிளகுத்தூள் சேர்த்தது கொடுக்கலாம்.

Categories

Tech |