Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவங்களுக்கு என்னாச்சு… அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்… பணியின் போது நடந்த விபரீதம்…!!

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரியில் சரஸ்வதி என்பவர் வசித்துவருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி இருக்கிறார். அங்கு தரைமட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் சத்யசாய் நகரில் வசித்து வரும் பெரியசாமி என்பவரும், கட்டிகானப்பள்ளி கீழ் புதூரில் வசித்து வரும் வெங்கடாஜலபதி மற்றும் முருகன் என்பவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியவுடன் 3 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியில் மயங்கிக் கிடந்த அந்த மூன்று தொழிலாளர்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் முருகன் மற்றும் பெரியசாமி ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வெங்கடாசலபதி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |