Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதாரில் பிரச்சினையா…? அலைய வேண்டாம்…. இந்த நம்பருக்கு அழையுங்கள் – UIDAI அறிவிப்பு…!!

ஆதாரில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த நம்பருக்கு அழைத்து தீர்வு காணலாம் என்று UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மாற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்வது?, ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?, ஒரே பெயரில் 2 ஆதார்அட்டை  இருந்தால் என்ன செய்வது?, ஆதாரில் செல்போன் நம்பரை அப்டேட் செய்வது எப்படி? போன்ற பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இது போன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு வேறு எங்கும் அலையத் தேவையில்லை. நம் வீட்டில் இருந்துகொண்டே செல்போன் நம்பர் மூலமாக இவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்கிறது UIDAI என்ற ஆதார் அமைப்பு. இதுகுறித்து UIDAI வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆதார் அட்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு 1947 என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழைத்து அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |