ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து ரயிலில் உணவு விற்கப்படாமல் இருந்தது. இதனால் பயணிகள் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் உணவையே சாப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கை ஏற்று பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் வழியாக உணவுகளை ஆர்டர் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் செல்போன் வழியாக ஐ.ஆர்.சி.டி.சி அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.