சிறுமியின் பாலியல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எனவே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றம் பல சட்டங்களை இயற்றி வருகிறது. இந்நிலையில் சிறுமிகளின் கைகளைப்பற்றி ஒருவரின் பேண்ட் ஜிப்பை திறக்க செய்வது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றத்தில் வராது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு ஒரு வழக்கில் சிறுமிகளை மேல் ஆடைகளோடு தொடுவது பாலியல் துன்புறுத்தல் இல்லை என தீர்ப்பளித்த அதே பெண் நீதிபதி புஷ்பா தான் இந்த வழக்கிலும் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.