தமிழகத்தில் மொத்தம் 34 திட்டங்களுக்கு 53 கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் இருக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 34 திட்டங்களில் ரூ.52,257 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ரூ.5.763கோடி, சன் எடிசன் நிறுவனம் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தி திட்டத்திற்கு ரூ.4,629 கோடி முதலீடுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் மூலம் தமிழகத்தில் 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் மூலம் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகள் அனைவரும் பயனடைய முடியும். மக்களின் நலனை கருத்தில் கொண்டே தமிழக அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.