தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவை போட்டியிட வைக்கும் முயற்சியில அமமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்தே சிறையில் இருந்து வெளிவந்துள்ள சசிகலாவை தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் அமமுக கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றாலே அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் சிக்கி முதல்வராக உள்ள பிரேம் சிங் தமாங் உதாரணத்தை முன்னிறுத்தியும் சசிகலாவுக்கு விலக்கு பெற அமமுகவினர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.