தெற்கு டெல்லி மாநகராட்சி பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்காக ஒரு மாபெரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகிற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அவ்வாறு நாம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. இவ்வாறு அதிகமாக தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனால் இந்தியாவில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு அதற்கான முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தெற்கு டெல்லி மாநகராட்சி போது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் இலவசமாக சாப்பிடலாம். மாநகராட்சியில் ” Garbage Cafe” என்ற பெயரில் இதை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று பல வித்தியாசமான நிகழ்வுகளை மக்கள், அரசியல்வாதிகள், வியாபாரிகள், முக்கிய பிரபலங்கள் ஆகியோர் மேற்கொண்டு வந்தால் பிளாஸ்டிக்கை விரைவில் ஒழித்துவிட முடியும்.