Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ஒன்று…! தற்போது செய்வது வேறு…! பைடனுக்கு எழுந்துள்ள விமர்சனங்கள்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கட்சிகளை ஆலோசிக்காமலேயே அரசாணைகள் வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல  புதிய அரசாணைகளை பிறப்பித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பைடன் பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு, குடியேற்ற விதிகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட அரசாணைகளில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டார். இந்நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக முறையில் எதிர்க் கட்சியுடன் ஆலோசனை செய்து தான் எந்த முடிவையும் எடுப்பேன் என்றும் அரசாணை மூலம் ஆட்சி செய்பவர் சர்வாதிகாரி” என்றும் ஜோ பைடன் கூறியதை தற்போது சுட்டிக்காட்டி பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  ஆனால்  இதுகுறித்து ஜோ பைடன் தரப்பிலிருந்து, “முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆட்சி காலத்தில்  இருந்த குறைகளை சரி செய்யவும், கொரோனா நெருக்கடி காரணமாகவும்  தன்னிச்சையாக இந்த அரசாணைகள் வெளியிட  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |