பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சசிகலா குடும்பத்தினர் அவர் எப்போது தமிழகம் திரும்புவார் என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். சசிகலா தமிழகம் திரும்பினாள் அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.