அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது கொரோனாவை கண்டறிய புதிய முறையிலான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல், காய்ச்சல் ,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதில் சுமார் 86 சதவீதம் நபர்களுக்கு வாசனை நுகர்வு திறன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி 8 விதமான சுவைகள் உடைய ஒரே நிறத்திலான மிட்டாய்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது இந்த ஆய்வில் உட்படுத்தப்படுவர்கள் சுமார் 90 நாட்கள் தினசரி அந்த மிட்டாயை சுவைத்து அதன் சுவை மற்றும் வாசனையை உணரவேண்டும்.
அதில் எவருக்கேனும் சுவையுணர்வோ அல்லது வாசனை உணர்வோ கண்டறிய முடியாத நிலை ஏற்படும் போது அதற்கென்று பிரத்தியேக ஆப் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் இதனை தெரிவித்துவிடும். அதனைத்தொடர்ந்து உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த ஆய்வின் முதல் நிலை வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக சுமார் 2800 நபர்களுக்கு 90 நாட்களுக்கான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் ஆய்விற்கான முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.