Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் மனைவியை ஏமாற்றியவர்… கருவை கலைத்த கொடுமை… நீதிமன்றத்தின் தரமான தீர்ப்பு…!!

காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

இவர் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தனது மனைவி மஞ்சுளாவை திண்டிவனத்திற்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுளா கர்ப்பமாக இருந்ததால் கருக்கலைப்பு மாத்திரையை அஜித்குமார் அவருக்கு வாங்கிக் கொடுத்து கருவை கலைத்து விட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு ராஜேஷ் குமார் மஞ்சுளாவை சென்னைக்கு அழைத்து வந்து, திருவேற்காட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அதன்பின் ராஜேஷ் கடந்த 2014ஆம் ஆண்டு மஞ்சுளாவுக்கு தெரியாமல் கோமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டார். இதனை அறிந்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்து, அவரது கணவர் ராஜேஷ் குமாரிடம் இதுகுறித்து வினவியுள்ளார். அதற்கு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரின் சாதி பெயரைக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மஞ்சுளா தனது கணவர் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் போலீசார் குமாரை கைது செய்து விட்டனர். இந்த வழக்கானது விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் குமாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர். அதோடு ரூபாய் இரண்டு லட்சம் ரூபாயை மஞ்சுளாவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன் பின் ராஜேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |