சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறை தண்டனை மகடந்தஅனுபவித்து தற்போது கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து சசிகலா இதற்கு முன்னதாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மருத்துமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் எடப்பாடிபழனிசாமி மற்றும் பாஜகவினரை கடுமையாக சாடி நமது எம்ஜிஆர் நாளேட்டில் கட்டுரை ஒன்று வெளியாகி வருகிறது.
அந்த கட்டுரையில், எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து திட்டங்கள் தீட்டினாலும், அவமானமாகி விடும் என்றும் பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி சரணாகதி அடைந்து நிற்பதும் பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் காட்டமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடம் கிடையாது என்று முதல்வரே தெளிவுபடுத்தி இருக்கிறார். சசிகலா உடல் நலம் பெற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சொல்லியது மனிதாபிமான அடிப்படையில்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.