Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தொடரில் ஆபாச படம்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர்…. எழுந்துள்ள சர்ச்சை…!!

கூட்டத்தொடரில்  உறுப்பினர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவருடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், “தான் பொதுவாக அவைக்குள் செல்போன் எடுத்து செல்ல மாட்டேன். விவாதங்களில் கேள்வி அளிப்பதற்காக மட்டுமே செல்போனை எடுத்துக் கொள்வேன். அந்த சமயம் என்னுடைய செல்போனில் ஸ்டோரேஜ் நிறைந்து விட்டதால் தேவையற்ற காணொளிகளை நீக்கினேன். னக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் கிடையாது. இதுவரை பார்த்ததும் கிடையாது. இனியும் பார்க்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். இதுபோன்ற விவகாரத்தில் கர்நாடக தலைவர்கள் சிக்குவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |