Categories
உலக செய்திகள்

கொரோனா இல்லை… ஆனால், லட்சம் பேர் இறக்க வாய்ப்பு… பிரிட்டனின் வெளியான அதிர்ச்சி தகவல்….!

பிரிட்டனில் கொரானா இல்லாமலேயே லட்சக்கணக்கானோர் இறக்க வாய்ப்பிருப்பதாக  அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். அந்நாட்டில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினமும் தொற்றினால் பாதிக்க படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டான் அரசாங்கம் மனதை கலங்கடிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த மாத இறுதிக்குள் 46,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலும் 18 ஆயிரம் பேர் இறக்க வாய்ப்புள்ளது. அதில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த ஆண்டுகளில் மேலும் 40,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளது.

கொரோனா பாதிப்புகள் இல்லாமலேயே மருத்துவமனையில் ஏற்படும் நெருக்கடிகளால் 105,000 பேர் இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதுவரை வெளிவந்த தகவலின் அடிப்படையில் பிரிட்டனில் இதுவரை கொரோனாவால் 103,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பின் எண்ணிக்கையானது அடுத்த மாத இறுதிக்குள் 122,000 என அதிகரிக்கும் என்று அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |