சரியான வேலை இல்லாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போடாரம்பாளையம் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரின் தாயார் பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சஞ்சய் தனது பாட்டி லீலாவதியின் வீட்டில் தங்கி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தார்.
அதன்பின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலை இல்லாததால் மனமுடைந்த சஞ்சய் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குண்டடம் போலீசார் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.