Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை…. இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல வஞ்சிபாளையம் பகுதியில் வீரபாண்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் இருவரிடமும் 15 மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் 2 பேரும் சிவகங்கை பகுதியில் வசித்து வரும் பாண்டியராஜன் என்பதும், மற்றொருவர் புதுக்கோட்டையில் வசித்து வரும் தமிழ்செல்வன் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் திருப்பூர்-பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு பகுதியில் தங்கி நிறுவனத்தில் பணி செய்து கொண்டே மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வீரபாண்டி போலீசார் அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |