மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பிரம்மாண்ட கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர்.
ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 400 கிலோ எடையில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.