Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு தகிட தகிட…. சர்ச்சையான நீதிபதி தீர்ப்பு – கொலிஜியம் எடுத்த அதிரடி…!!

குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற கொலிஜியம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

தற்போது நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சர்ச்சை தீர்ப்புகளை வழங்கியே நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவதி கனேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் அறிவித்துள்ளது.

உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என்று குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது கடந்த ஒரு வாரமாக பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில் இந்த பரிந்துரையை கொலிஜியம் வாபஸ் பெற்றுள்ளது.

Categories

Tech |