2 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கி இறந்துவிட்டதால், மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அந்த திமிங்கலத்தை புதைத்துவிட்டனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவோற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி விட்டது. அந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்துவிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலத்தை பைபர் படகு மூலம் மீனவர்கள் கரையில் இருந்து கடலுக்குள் இழுத்துச் சென்று நடுக்கடலுக்குள் விட்டனர்.
ஆனால் இந்த திமிங்கலம் மறுபடியும் அதே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி விட்டது. இதனை அடுத்து மீனவர்கள் ஓடிச்சென்று 2 டன் எடையுள்ள அந்த திமிங்கலத்தை பார்த்தபோது அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது. அதன்பின் போலீசாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் இறந்து போன 2 டன் எடையுள்ள அந்த திமிங்கலத்தை இழுத்து சென்று கடற்கரையில் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அதனை புதைத்துவிட்டனர்.