திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்,.ஆனால் திமுக எங்களின் எதிரி கட்சியாக உள்ளது. குடிநீர் பிரச்சனையை வைத்து திமுக நடத்தும் போராட்டம் என்பது வெற்று போராட்டம் ஆகிவிடும் என்று அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.