துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் பாஜக நிர்வாகி குஷ்பூவும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் விழா ஒன்றிற்காக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றார்.
அப்போது அதே விமானத்தில் பாஜக நிர்வாகி குஷ்புவும் ஓபிஎஸ்-இன் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். இது தற்செயலான சந்திப்பா? அல்லது அரசியல் காரணங்கள் ஏதும் உள்ளதா? என அரசியல் வட்டாரத் தற்போது கேள்விகள் எழுந்துள்ளது.