அம்மா கோவில் திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வேல் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆனாலும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் ஒருவரையொருவர் குறைகூறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோவில் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேல் பரிசாக தரப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் ஸ்டாலினுக்கு வேல் பரிசாக கொடுக்கபட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய ஓபிஎஸ், “ஆட்சியை பிடிக்க சிலர் வேலை பிடித்து வருகிறார்கள். வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தலும் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது என்று விமர்சித்தார்.