Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் அரசியலுக்கு வர மாட்டேன்… தெலுங்கு சமுதாயத்தில் தலைவரை உருவாக்குவேன்… ராம மோகன ராவ் பேட்டி…!!

நான் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டதாகவும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு சமுதாய நோக்கத்தோடு செயல்படுகிறது. இந்த சமுதாய அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.

எனக்கு தலைவராக விளங்கியவர் ஜெயலலிதாதான். நான் அவருடன் 6 ஆண்டாக பணியாற்றியவன். அவருடைய மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டேன். நான் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன். தெலுங்கு சமுதாயத்தில் ஒரு தலைவரை உருவாக்குவேன். ஜெயலலிதா மரணம் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |