ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை முடித்துவிட்டு சொர்ணம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அலறி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த சங்கிலியை பறித்த மர்ம நபர்களை பிடிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சொர்ணம் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 1/2 லட்சம் மதிப்புள்ள தங்க தாலி சங்கிலியை பறித்து சென்று அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.