நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான இ-பாஸ் நடைமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாத பொதுமக்கள் சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையானது பண்டிகை காலங்களில் அதிகரித்ததால் சோதனைக்காக, சோதனை சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது.
இதனால் இ-பாஸ் நடைமுறையானது தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் சென்னை, செங்கோட்டை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு ஊட்டியிலிருந்து தமிழக அரசின் அதிவிரைவு பேருந்துகள் இயக்கப்படுவதால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீலகிரியில் மட்டும்தான் இ-பாஸ் நடைமுறை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பும் அமலில் இருந்து வந்தது. ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்திலும் இ-பாஸ் முறை ரத்தானது குறிப்பிடத்தக்கது.