ஆழ்கடலில் வசிக்கக்கூடிய அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இந்த மீன் ஆபத்துக் காலங்களில் தன்னை பாதுகாப்பதற்காக பந்து போல் உருமாறி கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் இந்த மீனின் உடலில் முட்கள் அமைந்திருக்கும்.
கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி கடற்கரை பகுதி வரை கடல் சீற்றம் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபடுவது போன்ற காரணங்களால் ஆலிபர் ரெட்லி ஆமை, டால்பின்கள் போன்ற பல அரிய கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.