Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையின் பாரம்பரியத்தை காப்போம்” பின்வாங்கியது கேரள அரசு …!!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின சமத்துவத்தை ஆதரிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் விடா முயற்சியாக இருந்தது.

இந்நிலையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடதுசாரி அரசு கேரளாவில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் வென்றது. அங்குள்ள 20 மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 19 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. தோல்வியை  உணர்ந்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது சபரிமலை விவகாரத்தில் தனது பாலின சமத்துவ முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

இது குறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ள கருத்தில் , நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியங்களை நாம் பாதுகாப்பது  நல்லதுதான். இவற்றை பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை. சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை பழைய நடைமுறை தொடர்வதைஉறுதி செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் இதற்கு காலதாமதம் ஆகும் என்றால் உடனடியாக அவசர சட்டத்தை போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |