Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்று நாடகம்… மகளுக்கு தாய் செய்யும் அநியாயம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு…!!

கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் என்பவர், தனது மருமகள் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தாண்டானூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தகுமார் என்பவருடன் தனது மருமகளுக்கு கள்ள தொடர்பு இருப்பதாகவும், அதனை தனது மகன் கண்டித்ததால் அவரை சங்கீதா கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தற்போது 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது 13 வயது பேத்தியை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய சங்கீதா முயற்சி செய்து வருவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின் காவேரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வேல்முருகனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில் தனது கள்ளக் காதலனான ஆனந்தகுமாருடன் சங்கீதா தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து வேல்முருகனின் உறவினர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பின் சிறுமியை கள்ள காதலனுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருவதாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மூதாட்டி கொடுத்த புகாரானது உண்மை என்று தெரிந்த பின்பு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சங்கீதா மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்வதற்காக அவர்களது செல்போன் எண்ணை வைத்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |