நாட்டின் ஆதார் கார்டு மூலம் போலியான மோசடிகள் நடைபெறுவதால் மக்கள் கவனத்துடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகப்பெரிய அடையாளம். அதை அனைவரும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் சில போலியான ஆதார் கார்டு மூலம் மோசடி செய்து வருகின்றனர். அதிகாரபூர்வமான ஆதார் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளை சில போலியான வலைத்தளங்களும் வழங்கி வருகின்றன.
இந்த போலி வலைத்தளங்கள் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய, மொபைல் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கேட்கின்றன. இதன் மூலம் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே மக்கள் அதிகாரப்பூர்வ சேவை மையங்களை பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தை தவிர்க்கலாம்.