Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊடகத் துறையை சார்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊடகத் துறையை சார்ந்தவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களில் படிப்படியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |