மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு வருடத்தில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம்தோறும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவம் நொடிக்கு நொடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான தந்தைக்கு 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகளில் தனது வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் அவருக்கு 105 ஆண்டுகள் சிறை மற்றும் பின் பகுதி பழுக்க 24 பிரம்படிகள் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.