Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவன சிதறலால் ஏற்பட்ட விளைவு…. ஓட்டுனருக்கு நேர்ந்த துயரம்… கைதான மற்றொரு ஓட்டுனர்…!!

பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பணிமனைக்கு பொள்ளாச்சியில் இருந்து அந்தியூருக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் டீசல் பிடிப்பதற்காக பணிமனைக்கு வந்துள்ளது. இந்த பேருந்தை பிரம்மதேசம் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் பக்தவச்சலம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, பணிமனைக்குள் ராஜா ஓட்டி வந்த பேருந்தானது பக்தவச்சலம் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை ஊழியர்கள் மீட்டு உடனடியாக அதே பேருந்தில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பக்தவச்சலம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார் இந்த விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுனர் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |