சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 4 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்றும், அதன்பிறகு வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆன பிறகு தமிழக அரசியலில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்க்கப் பட்டு வருகிறது.