பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் எப்போது தமிழகம் திரும்புவார் என்று அமமுக கட்சியினர் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சசிகலாநாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிப்ரவரி 3ஆம் தேதி அல்லது ஐந்தாம் தேதி தமிழகம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தமிழகம் திரும்பிய பின்னரே அவரது அரசியல் ஆட்டம் என்ன என தெரியவரும்.