இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர் தமிழக வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் உலக அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை முன்னுக்கு கொண்டு வரும்.
இதற்கு நானே சாட்சி என்றும் கூறினார். இந்நிலையில், “இன்று நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தாருடன் சென்று மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். அப்போது அவருடைய ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Cricketer #natarajan tons tonsured head at Pazhani Murugan temple as an offering. pic.twitter.com/2oETuLAOGW
— Pramod Madhav (@PramodMadhav6) January 30, 2021