Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை வச்சு என்ன பண்ணுவீங்க…. திருடு போன பேருந்து டிக்கெட்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை அரசு பேருந்தில் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரை சார்ந்தவர் ரகுபதி. இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ரகுபதி மற்றும் சண்முகம் பணியில் இருந்துள்ளனர். பேருந்து ஓசூரை நோக்கி சென்றபோது வழியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பேருந்தில் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த ரகுபதி மற்றும் சண்முகம் கோயம்பேட்டில் உள்ள போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் கோயம்பேடு மற்றும் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் டிக்கெட் பை வைத்திருந்த இடத்தின் அருகே அமர்ந்திருந்தார். அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் திருடப்பட்ட டிக்கெட்கள் வீசப்பட்டிருந்தன.

இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதனை கைப்பற்றியுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அந்த வாலிபர் டிக்கெட்டுகள் இருத்த பையை தூக்கி விசியது தெரிய வந்தது. பையில் பணம் இருபதாக நினைத்து பேருந்தில் இருந்த பையை எடுத்து சென்றுள்ளார். பின்பு அதில் டிக்கெட்டுகள் இருந்ததால் அதனை சாலையோரத்தில் வீசி சென்று உள்ளார் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |